Saturday, October 9, 2010

லெமுரிய நாகரிகத்தின் மிருகமான யாளி கற்பனையல்ல ஏன்?

9உலகின் முதல் தொன்மையான நாகரிகங்களில் ஒன்றாக கருதப்பட்ட லெமுரிய அல்லது இலெமுரிய நாகரிகம் என்று அழைக்கப்படுகின்ற கடல் கொண்டதனால் அழிந்து விட்ட (தென் பகுதி நிலப்பரப்பின்கன்னியாக்குமரிக்கு கீழ் இருந்த) வரலாற்றின் துயரப்பக்கங்களுக்கு அறிஞ்சர்கள் தந்த பெயர்தான் "அழிந்தக்கண்டம்"அதாவது "மூ".இந்த கண்டத்தில் வாழ்ந்த நம் முன்னவர்கள் கண்டம் விட்டு இந்தியாவிற்கு வந்தது முதற்கொண்டு யாழியும் இந்திய கலைகளில் ஊடுருவி நிரந்தரம் ஆனது.யாழியினை குறித்து பல சர்ச்சைகள் இருந்தாலும் சரியான ஆராய்சிகள்,ஆய்வுகள்,இல்லாமையால
நமக்கு அதனைப்பற்றிய குறிப்புகள் எளிதாக கிடைக்கவில்லை.எனினும் எனக்கு கிடைத்த தகவல்கள்,குறிப்புகள்அடிப்படையில் இந்த சிறிய குறிப்பினை யாழி என்றால் புதிய காதடைக்கும் ஒரு இசையின் அல்லது குறுந்தகட்டின் பெயர் என நினைக்கும் இளய தலைமுறைக்கு நினைவுட்ட என்னால் ஆன சிறிய முயற்சி.யாளியின்பூர்விகம்யாளி என்ற சிங்கமுகத்தில் யானையின் துதிக்கையை நினைவுபடுத்தும் உறுப்புடன் காண்ப்படும் இந்த மிருகம் இந்தியாவில் கி.மு 25000 ம் ஆண்டுக்கு பின்னர்தான் வழக்கத்திற்கு வந்தது. நமது நாட்டில் குறிப்பாக தமிழ்நாட்டில் ஆலயங்கள் செங்கற்களிருந்து கற்றாளிகளாக மாறத்துவங்கியது கி.பி 800 களில்தான் பராந்தகச்சோழன் மற்றும்ஆதித்திய சோழன் காலத்தில் முதன்முதலாக ஆலயங்கள் கருங்கற்கள் கொண்டு கலைநயத்துடன் கட்டப்பட்டன.



இதனை கற்றாளி என்று வரலாற்றாலர்கள் குறிப்பிடுவர்.இதற்கு முன்னால் இந்திய கோவில்களில் உள்ள சிற்பங்களில் உதாரணம் மாமல்லபுரம்,அஜந்தா,புத்தவிஹாரங்களிலும் இந்த சிற்பத்தினை பற்றிய குறிப்புகள் கிடைக்கவில்லை.இந்திய சிற்ப சாஸ்திரங்களிலும் குறிப்புகள் கிடைக்கவில்லை.எனினும் ஜப்பானிய ஆராய்சியாளர்கள் குறிப்பின்படி லெமுரியர் நாகரிகம் இந்தியப்பெருங்கடலிலும் இருந்தது என்பதற்கு ஆதாரம் கிடைத்துள்ளது.லெமுரிய நாகரிகம் இருந்தது என்றால் இந்த மிருகம் கற்பனையா அல்லது எகிப்திய பிரமிடுகளில் காண்ப்படும் மிருக தலையுள்ள அயல்கிரக உயிரினமா? அல்லது கற்பனையா?என்பதன் உண்மை விரைவில் தெரியும்.